பள்ளிகளுக்கு வரும்போது முககவசம் அணியவேண்டும் பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை முதல் மதிப்பெண் பட்டியல் அரசு அறிவிப்பு
பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படும் என்றும், பள்ளிகளுக்கு வரும்போது முககவசம் அணிவதோடு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
அரசு தேர்வுத்துறை இயக்குனர் (முழுக்கூடுதல் பொறுப்பு) மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிளஸ்-2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 24-ந்தேதி (நாளை) முதல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதிவுசெய்ய விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு தற்போது மறுகூட்டலோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்கக்கூடாது. விடைத்தாள் நகல் பெற்றபின்னரே அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் தேவையில்லை எனில், மாணவர் விரும்பினால் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்களை சரிபார்த்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வருகிற 24-ந்தேதி (நாளை) முதல் 30-ந்தேதி வரை மாணவர்களுக்கு வினியோகிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு அவர் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.
மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கவும் மற்றும் மதிப்பெண் பட்டியலை வாங்கவும் வரும்போது பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் க.சண்முகம் அரசாணையாக பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* மதிப்பெண் பட்டியல் மாணவர்கள், பெற்றோர் வரிசையில் நின்று வாங்குவதை தவிர்க்கவேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 மாணவர்களுக்கு வழங்கும் வகையில் நேரத்தை ஒதுக்கவேண்டும்.
* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை வாங்க வருவதை தவிர்க்கவேண்டும். முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தளர்வு செய்யப்பட்டபிறகு வந்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.
* சமூகஇடைவெளியை பின்பற்றுவதற்கு ஏற்ப கட்டங்கள் வரையப்படவேண்டும். மேலும் மாணவர்கள், பெற்றோர் முககவசம் கட்டாயம் அணிந்துவரவேண்டும். அதேபோல், பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் முககவசம் அணிந்திருக்கவேண்டும். மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும்போது பணியாளர்கள் கையுறை அணிந்திருக்கவேண்டும்.
* மதிப்பெண் பட்டியல் வழங்கும் இடங்கள், விடைத்தாள் நகல், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கான பணிகள் நடக்கும் இடங்கள் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். பள்ளிகளுக்குள் உள்ளே நுழையு போது அனைவருக்கும் கிருமி நாசினி திரவம் அல்லது சோப்பு வழங்கி கைகளை நன்கு கழுவசொல்லவேண்டும்.
* பள்ளிகளுக்குள் நுழையும்போது ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக கழுத்தில் அணிந்திருக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story