திருமணம் குறித்து ‘யூடியூப்’பில் வீடியோ வெளியிட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் அளித்த புகாரில் பெண் கைது
தனது திருமணம் குறித்து ‘யூடியூப்’பில் வீடியோ வெளியிட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் அளித்த புகாரில் பெண் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை,
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து பலர் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருந்தனர். அதன்படி சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சூர்யா தேவி(வயது 27) என்ற பெண், ‘யூடியூப்’பில் வனிதா விஜயகுமார் குறித்தும், அவரது திருமணத்தை பற்றியும் பல்வேறு கருத்துகளை வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.
இதுகுறித்து வனிதா விஜயகுமார், போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதேபோல் சூர்யா தேவியும், தன்னை அவதூறாக பேசியதாக வனிதா விஜயகுமார் மீது வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் அனைத்து வழக்குகளும் வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். ஆனாலும் சூர்யாதேவி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சூர்யா தேவியை வடபழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று சூர்யா தேவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். சூர்யா தேவி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், சூர்யா தேவியை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் மீதும் நடிகை வனிதா விஜயகுமார் ஆன்-லைன் வாயிலாக வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

Related Tags :
Next Story