ஆந்திராவில் உள்ள கம்பெனிகளுக்கு தமிழகத்தில் இருந்து ஊழியர்களை அழைத்து செல்ல அனுமதி அரசு உத்தரவு


ஆந்திராவில் உள்ள கம்பெனிகளுக்கு தமிழகத்தில் இருந்து ஊழியர்களை அழைத்து செல்ல அனுமதி அரசு உத்தரவு
x
தினத்தந்தி 24 July 2020 3:14 AM IST (Updated: 24 July 2020 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திரபிரதேசத்துக்கு (தமிழகத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு) வேலையாட்களை அழைத்து செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தன.

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜப்பான் தூதரகம் மற்றும் ஜப்பான் நிறுவனங்கள், தமிழகத்தில் இருந்து ஆந்திரபிரதேசத்துக்கு (தமிழகத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு) வேலையாட்களை அழைத்து செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தன.

‘அப்பல்லோ டயர்ஸ்’ நிறுவனமும் சித்தூர் மாவட்டத்துக்கு ஊழியர்களை அழைத்துச்செல்ல அனுமதி கோரியிருந்தது. அதற்கு நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்ட கலெக்டர்கள் அனுமதி அளித்திருந்தனர். மேலும் ஆந்திரா ஸ்ரீசிட்டி போன்ற இடங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தமிழகத்தில் இருந்து பணியாளர்கள் தினமும் போய் வருவதற்கான வேண்டுகோளை பல நிறுவனங்கள் வைத்துள்ளன. இதன் அடிப்படையில் அரசுக்கு, தமிழக தொழில்துறை சில கோரிக்கைகளை வைத்தது.

அந்த வகையில், மேலும் நீட்டிப்புச் செய்துகொள்ள வசதியுள்ள ஒரு மாதத்துக்கு செல்லக்கூடிய ‘இ-பாஸ்’ வழங்க வேண்டும். தனிப்பட்ட நபரின் பெயரில் இல்லாமல், அந்தந்த நிறுவனங்கள் பெயரில் ‘இ-பாஸ்’க்கு விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

பணியாளர்களை அழைத்துச் செல்லவும், அழைத்து வரவும் கம்பெனியே போக்குவரத்து வாகனங்களை ஏற்பாடு செய்யும். 2 சக்கர வாகனங்களுக்காக மிகக்குறைவான எண்ணிக்கையில் பாஸ்களை வழங்கினால் போதுமானது. இந்த ‘இ-பாஸ்’களுக் கான அங்கீகாரத்தை தொழில்துறையே கவனித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்று சில நிபந்தனையுடன் ஆணையிடுகிறது. அதன்படி, தமிழகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் ஆட்கள் பணியாற்றும் கம்பெனி இருக்கும் மாவட்டத்தின் கலெக்டர் அந்த மாதாந்திர பாசை வழங்க வேண்டும். மாதந்தோறும் அவர்தான் அதை புதுப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story