பெண்கள் சிறையில் இருக்கும் நளினி ‘வீடியோகால்’ மூலம் தாயாருடன் பேசினார்
பெண்கள் சிறையில் இருக்கும் நளினி ‘வீடியோகால்’ மூலம் தனது தாயாருடன் பேசி உள்ளார்.
வேலூர்,
முன்னாள் பிரதமர் கொலை வழக்கு கைதி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சக கைதி ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நளினி சிறையில் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையாக வாட்ஸ்அப் வீடியோ காலில் நளினி தனது தாயார் பத்மாவுடன் 5 நிமிடம் பேசினார். நளினியை சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றுவது தொடர்பாக அவரது தாயார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story