தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தற்கொலை
தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
வாசுதேவநல்லூர்,
தென்காசி மாவட்டம் குருவிக்குளம் அருகே உள்ள ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிக்கனி (வயது 42). விவசாய கூலி தொழிலாளி.இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு வாசுதேவநல்லூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் அங்குள்ள இரும்பு கதவில் மாரிக்கனி தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். போலீஸ் விசாரணையில், மாரிக்கனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கொரோனா பாதிப்பு காரணமாக மனஅழுத்தத்தால் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரிக்கனிக்கு பொன்னுத்தாய் (36) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story