வரலாறு காணாத உயர்வு: சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,232 க்கு விற்பனை


வரலாறு காணாத உயர்வு: சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,232 க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 July 2020 12:36 PM IST (Updated: 25 July 2020 12:36 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் வரலாறு காணாத உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தங்கம் விலை மாற்றம் என்பது எப்போதாவது தான் இருக்கும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஓரிரு நாட்களிலேயே அதிகளவில் உயர்ந்து தங்கம் விலை தாறுமாறான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் விலை 2 மடங்குக்கு மேல் அதிகரித்து இருப்பதை புள்ளி விவரங்கள் மூலம் பார்க்க முடிகிறது. கடந்த 2009-10-ம் ஆண்டு இடைவெளியில் ஒரு பவுன் தங்கம் ரூ.15 ஆயிரம் என்ற நிலையில் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த விலை ஏற்றம் என்பது கடந்த 5 ஆண்டுகளில் தான் பெருமளவில் இருந்துள்ளது.

அந்தவகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்திலேயே பயணித்து வந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இப்போது ஒரு பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத உயர்வை தொட்டுள்ளது.

விலை உயர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்காதா? என எதிபார்க்கும் பலருக்கு, ‘வாய்ப்பே இல்லை ராஜா’ என்பது போல் ஒவ்வொரு நாளும் வரும் விலை உயர்வு செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி, இன்றும் விலை அதிகரித்து தான் காணப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 உயர்ந்து சவரன் ரூ.39,232-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,904-ஆக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story