வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம் -அமைச்சர் ஜெயக்குமார்


வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம் -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 25 July 2020 3:03 PM IST (Updated: 25 July 2020 3:03 PM IST)
t-max-icont-min-icon

வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ ஜெயலலிதா வாழ்ந்த இடம் நினைவில்லமாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான், தமிழக மக்களின், அதிமுக, மாற்றுக் கட்சியினரின் எண்ணம். அதனால் தான், அவர் வாழ்ந்த இடம் நினைவில்லமாக்கப்படும் என்றும், அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும் என்ற மக்களின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எல்லோரும் போற்றப்படக்கூடிய விஷயம்.

தொண்டர்கள் அனைவரும் கோயிலாக நினைக்கக்கூடிய இடம் அந்த இல்லம். அதனை நினைவில்லமாக்க ஒத்துழைப்பு தர வேண்டும். அதனால், அவருடைய வாரிசுகள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார். 

இ-பாஸ் இன்றி கேளம்பாக்கம் சென்ற ரஜினியின் வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "சட்டத்தின் முன் அனைவரும் சமம். பாரபட்சம் கிடையாது. சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. விதிமுறைகளின்படியே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் எடுத்தாரா என்பதற்கு தற்போது வரை ஆதாரம் இல்லை” என்றார்.


Next Story