தேனி மாவட்டத்தில் மேலும் 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தேனி மாவட்டத்தில் மேலும் 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது. முதலில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருந்தது அதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற்று நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் மேலும் 233 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3,789 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இதுவரை 1,940 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,803 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது.
Related Tags :
Next Story