தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மேலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில்பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பச்சலனம் காரணமாக கடலோர மற்றும் அதனை ஓட்டியுள்ள உள்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story