பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவிக்கு பிரதமர் பாராட்டு


பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவிக்கு பிரதமர் பாராட்டு
x
தினத்தந்தி 26 July 2020 2:01 PM IST (Updated: 26 July 2020 2:01 PM IST)
t-max-icont-min-icon

கடினமான குடும்ப சூழலிலும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:-

நாமக்கல்லை சேர்ந்த கனிகா என்ற மாணவியுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, நாமக்கல் பற்றி கேள்விப்படும்போது எனக்கு நினைவுக்கு வருவது மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோவில் தான், ஆனால், தற்போது நாமக்கல் என்று சொல்லும்போது மாணவி கனிகாவின் பெயரும் நினைவுக்கு வருகிறது என்றார்.

அப்போது பேசிய மாணவி கனிகா, தேர்வில் 486 மதிப்பெண்கள் மட்டுமே எடுப்பேன் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது 490 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மாணவி கனிகாவின் தந்தை ஓட்டுநராக பணிபுரியும் நிலையில், கனிகாவின் சகோதரி மருத்துவ படிப்பு படித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது போன்ற கடினமான சூழலிலும் சாதிக்கக் கூடிய ஏராளமான மாணவர்கள் நமது நாட்டில் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இது போன்று மற்றவர்களுக்கு முன்மாதிரியாக புத்துணர்ச்சி அளிக்க கூடிய கதைகளை அதிகளவில் மற்றவர்களுக்கு பகிரும் படி இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.


Next Story