மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிசிஐடி அறிக்கை தாக்கல் + "||" + CBCID Submit reports on Madurai high court

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு:  சிபிசிஐடி அறிக்கை தாக்கல்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மதுரை,

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக முதலில் விசாரணையை மேற்கொண்ட  சிபிசிஐடி, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  சீலிட்ட கவரில் சிபிசிஐடி அறிக்கையை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் சமர்ப்பித்தார்.

இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் சிபிஐ  சிபிஐ தரப்பில் அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை. வழக்கை விசாரித்த  சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை என்று சிபிஐ வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசாரணை
சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று திடீரென வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு வந்தனர்.
2. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.