தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு?

தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு?
x
தினத்தந்தி 29 July 2020 2:17 AM GMT (Updated: 29 July 2020 2:17 AM GMT)

தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: 

தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஜூன்மாதம் பிரிக்கபட்ட மண்டலங்கள் விவரம் வருமாறு

மண்டலம் 1  : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மண்டலம் 6 :  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

Next Story