சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அவசியமா? - ஜி.கே.வாசன், ஆர்.சரத்குமார் கருத்து


சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அவசியமா? - ஜி.கே.வாசன், ஆர்.சரத்குமார் கருத்து
x
தினத்தந்தி 29 July 2020 8:49 PM GMT (Updated: 29 July 2020 8:49 PM GMT)

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அவசியமா என்பது குறித்து ஜி.கே.வாசன், ஆர்.சரத்குமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா 2020 என்ற புதிய மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆய்வுசெய்து வருகிறது. புதிய மசோதாவில் மேற்கொள்ள இருக்கும் திருத்தங்களால் இயற்கை வளங்களும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாது. பாதுகாப்பு அம்சங்களை வரைவு சட்டத்திருத்தத்தில் சேர்ப்பதற்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளை சிதைக்கும் வகையில் மாநில சுயாட்சி அதிகாரத்தை பறிப்பதையும், பொதுமக்களின் கருத்து, ஒத்துழைப்பின்றி திட்டங்களை செயல்படுத்துவதையும், பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரத்தை நீர்த்துபோக செய்யும் வரைவு சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சட்டத்திருத்த வரைவை எதிர்த்து மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பாக மத்திய அரசு உடனடியாக சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு-2020-ஐ திரும்பப்பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story