மாநில செய்திகள்

சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைகிறது - குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு + "||" + Corona infection is declining in Chennai police Increase in the number of healers

சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைகிறது - குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைகிறது - குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைந்து குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  செல்கிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும், கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை போலீஸ்துறையில் ஆரம்பத்தில் தினசரி 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த தொற்று பாதிப்பு படிபடியாக குறைந்து வருகிறது. நேற்று 8 போலீசார் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னை போலீசில் 1,678 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் தொற்று பாதிப்பை விட குணம் அடையும் போலீசார் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று 34 போலீசார் குணம் அடைந்தனர். இதுவரை சென்னை போலீசில் 1,678 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியதில் 1,279 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 20,419- பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் புதிதாக 20,419- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு- இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று
கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
4. மராட்டியத்தில் மேலும் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.