மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு -முதல்வர் பழனிசாமி + "||" + Curfew extended in Tamil Nadu till August 31; Full curfew on all Sundays Chief Minister Palanisamy

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு -முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு  -முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் சென்னையில் தான் முதலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர்

அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம்களால் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது. அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளார். ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு 

ரெயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும், இ-பாஸ் நடைமுறையும் தொடரும்

காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி. ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும். 

பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில்  வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இதுவரை 1,382 பேர் உடல் உறுப்பு தானம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் இதுவரை 1,382 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது: ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளீயிடு
தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளீயிடப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் பேட்டி
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி அளித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...