மாநில செய்திகள்

மாநிலங்களுக்குள்-மாநிலங்களுக்கு இடையிலான பொது - தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை-முதல்வர் பழனிசாமி + "||" + Interstate within states Ban on public-private bus services Chief Minister Palanisamy

மாநிலங்களுக்குள்-மாநிலங்களுக்கு இடையிலான பொது - தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை-முதல்வர் பழனிசாமி

மாநிலங்களுக்குள்-மாநிலங்களுக்கு இடையிலான பொது - தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை-முதல்வர் பழனிசாமி
மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் சென்னையில் தான் முதலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர்

அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம்களால் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது. அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட். 31 வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
* ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு  அமல்படுத்தப்படும்

* நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஆக.31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி

* சென்னையில் ஆக.1 முதல் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்

* சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

* நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி

* மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில், மசூதி, தேவாலங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை

* தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலங்களை திறக்க அனுமதி

* பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்

* பிற மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கு குறைவான வருமானம் கொண்ட கோவில், தேவாலயம், மசூதிகளை திறக்கலாம்

* மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், வருபவர்கள் இ பாஸ் பெறுவது ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம்

* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும்

* மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்

* திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்

* மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்

* ரெயில், விமானப் போக்குவரத்து விஷயத்தில் தற்போதைய நடைமுறை தொடரும் இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. முதல் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் எல்லாவற்றையும் தீர்த்துவிடாது - முன்னணி தொற்றுநோய் ஆலோசகர்
முதல் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் எல்லாவற்றையும் தீர்த்து விடாது என இங்கிலாந்து அரசின் முன்னணி தொற்றுநோய் ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
2. கொரோனா தடுப்பூசி: ரஷியா வழிகாட்டுதல்கள் - ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் -உலக சுகாதார அமைப்பு
கொரோனா தடுப்பூசி விஷயத்தில் ரஷியா வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
3. தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக புதிய கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
4. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சென்னை மாநகரம்
கொரோனா பாதிப்பில் இருந்த சென்னை மாநகரம் படிப்படியாக மீண்டு வருகிறது.
5. மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும்; பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதற்காக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.