மாநில செய்திகள்

நவம்பர் வரை ரேஷனில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ் பேட்டி + "||" + An additional 5 kg of rice will be provided in the ration till November - Interview with Minister Kamaraj

நவம்பர் வரை ரேஷனில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ் பேட்டி

நவம்பர் வரை ரேஷனில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ் பேட்டி
ரேஷன் கடைகளில் வரும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு விவசாயிகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி அளிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்தையும் டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் ரேஷனில் நவம்பர் வரை ஏற்கனவே வழங்கப்படும் 20 கிலோ அரிசியுடன் கூடுதலாக ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது - தமிழக அரசு
ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. ரேஷன் கடைகளில் இன்று முதல் 500 ரூபாய் மலிவு விலை மளிகை பொருட்கள் வழங்கப்படும்
ரேஷன் கடைகளில் இன்று முதல் 500 ரூபாய் மலிவு விலை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.