தமிழக அரசு விவசாயிகளின் நலனை காப்பற்ற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை


தமிழக அரசு விவசாயிகளின் நலனை காப்பற்ற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
x
தினத்தந்தி 30 July 2020 12:17 PM GMT (Updated: 30 July 2020 12:17 PM GMT)

பருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளை பாதுகாத்து, அவற்றை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகள் ஒரு போக விளைச்சலுக்கே திண்டாடி கொண்டிருக்கும் நிலையில், விளைந்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யாமல் அரசு அலட்சியம் காட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது அதிர்ச்சியையும் , வேதனையையும் அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்திருப்பதாக அரசு சொன்னாலும், அவை உரிய வசதிகளுடனும் பாதுகாப்புடனும் இருப்பதில்லை ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை மூடுவதற்கு தார்பாலின், ப்ளாஸ்டிக் ஷீட் போன்றவை போதிய அளவில் இல்லாததாலும், வெறும் தரையிலேயே நெல் மூட்டைகளை அடுக்கியதாலும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாகவும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இந்த நிலை தொடர்வதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story