இந்து மதத்தை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என பேசியதாக, இயக்குனர் வேலு பிரபாகரன் கைது

இந்து மதத்தை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும்" என பேசியதாக, இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
சென்னை
கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், இந்து மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தும், இயக்குனரும், நடிகருமான வேலு பிரபாகரன் பேட்டி அளித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு, சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்த புகாரின்பேரில், வேலு பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மத, இன விரோத உணர்வுகளை தூண்டுவது, கலகம் செய்ய தூண்டுவது, மத உணர்வுகளை புண்படுத்துவது, தவறான தகவல் மூலம் பொதுமக்களை திசைத்திருப்புவது என ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதையடுத்து சென்னை மதுரவாயலில் வைத்து இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ், காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story