புதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


புதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 31 July 2020 3:13 PM GMT (Updated: 31 July 2020 3:13 PM GMT)

புதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இதனையடுத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில், உயர்மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-

‘‘மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படும். இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி. புதுச்சேரிக்குள் வருபவர்களுக்கும், வெளியே செல்பவர்களுக்கும் இ-பாஸ் கட்டாயம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story