மாநில செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்:ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதா?‘வாட்ஸ்-அப்’பில் பரவும் காட்சிகளால் பரபரப்பு + "||" + jeyaraj bennix custody murder; whatsapp went viral

சாத்தான்குளம் சம்பவம்:ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதா?‘வாட்ஸ்-அப்’பில் பரவும் காட்சிகளால் பரபரப்பு

சாத்தான்குளம் சம்பவம்:ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதா?‘வாட்ஸ்-அப்’பில் பரவும் காட்சிகளால் பரபரப்பு
சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சாத்தான்குளம்,

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது பிரேத பரிசோதனை வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ ‘வாட்ஸ்-அப்’பில் பரவி வருகிறது. அதில், காயங்களுடன் இருந்த 2 உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடப்பது போன்றும், அதை மாஜிஸ்திரேட்டு ஒருவர் பார்வையிடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. மேலும் இறந்தவர்களின் உறவினர் ஒருவர் மாஜிஸ்திரேட்டு காலில் விழுந்து நீதி வழங்குமாறு கூறி கதறி அழுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: பென்னிக்ஸ் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, பென்னிக்சின் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2. ஜெயராஜின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி: ஆணையை எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்
சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஜெயராஜின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனத்திற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
3. சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இறந்ததாக வழக்கு: மகேந்திரனின் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்
சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் வாலிபர் மகேந்திரன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
4. சாத்தான்குளம் சம்பவம்: சிறுபான்மையினர் நல ஆணையம் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் - தலைவர் ஜான் மகேந்திரன் பேட்டி
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையம் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருப்பதாக ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் தெரிவித்தார்.
5. சாத்தான்குளம் சம்பவம்: அரசு டாக்டர் வெண்ணிலாவிடம் மருத்துவ அதிகாரி திடீர் விசாரணை
சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை-மகனுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டர் வெண்ணிலாவிடம், மருத்துவ அதிகாரி நேற்று திடீர் விசாரணை நடத்தினார்.