தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் - இருமொழிக் கொள்கை குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து


தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் - இருமொழிக் கொள்கை குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து
x
தினத்தந்தி 1 Aug 2020 9:24 AM GMT (Updated: 1 Aug 2020 9:24 AM GMT)

தமிழக அரசு இருமொழிக் கொள்கையை தாங்கிப் பிடிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பிற்கு, தேசிய அளவில் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்த புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்காதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோர் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் இருமொழிக் கொள்கையை தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், “தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்” என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Next Story