உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி


உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 2 Aug 2020 1:55 PM GMT (Updated: 2 Aug 2020 1:55 PM GMT)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது. 

இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ எனக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்து, கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன், பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன், எனது உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதுடன், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், “கொரோனா தொற்றில் இருந்து திரு. அமித்ஷா விரைவில் குணமடைய சர்வ வல்லமையுள்ள கடவுளை பிராத்திக்கிறேன். அவரது நல்ல ஆரோக்கியத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.



Next Story