தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்


தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
x
தினத்தந்தி 4 Aug 2020 2:04 PM GMT (Updated: 4 Aug 2020 2:04 PM GMT)

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து 6,501 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,08,784 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 55,152 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 55,122 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 28 லட்சத்து 92 ஆயிரத்து 395 ஆக உள்ளது. 

சென்னையில் இன்று 1,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,04,027 ஆக உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-










Next Story