மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு துணை சபாநாயகர் தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு


மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு துணை சபாநாயகர் தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2020 1:26 AM GMT (Updated: 5 Aug 2020 1:26 AM GMT)

மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு துணை சபாநாயகர் தொடர்ந்த வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்து, அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த சம்பவத்துடன் சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதுகுறித்து டி.வி., பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து மு.க.ஸ்டாலினிடம், ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பதில் அளிக்கும்படி மு.க.ஸ்டாலினுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய மு.க.ஸ்டாலின் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை, வருகிற 13-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Next Story