அமராவதி அணையில் இருந்து நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு


அமராவதி அணையில் இருந்து நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2020 5:08 PM GMT (Updated: 5 Aug 2020 5:08 PM GMT)

அமராவதி அணையில் இருந்து நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் அமராவதி அணையிலிருந்து, குடிநீர் மற்றும் பாசனப் பகுதியில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, தண்ணீர் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக கரூர் நகரம் வரை குடிநீர் தேவை மற்றும் 18 பழைய வாய்க்கால்களுக்கு உட்பட்ட ஆயக்கட்டுப் பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு நாளை ஆகஸ்ட.6 முதல் ஆக.16 வரை 11 நாட்களுக்கு 1,210 மி.க.அடி தண்ணீர் மற்றும் அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் குடிநீர் மற்றும் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, நாளை (ஆக.6) முதல் ஆக.20 வரை 15 நாட்களுக்கு, 570 மி.க.அடி தண்ணீர், மொத்தம் 1,780 மி.க.அடி தண்ணீரைத் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

மேலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story