சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது - மாநகராட்சி தகவல்


சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது - மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2020 4:13 AM GMT (Updated: 6 Aug 2020 4:13 AM GMT)

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறையாமல் இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்தநிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதியில் ஏற்கனவே 66 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வெகுவாக குறைந்து 24 தெருக்களுக்கு மட்டும் ‘சீல்’வைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story