மாநில செய்திகள்

பெய்ரூட் வெடிவிபத்து: சென்னையிலும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட், சுங்கத்துறை விளக்கம் + "||" + Beirut explosion: 740 tons of ammonium nitrate in Chennai Customs Description

பெய்ரூட் வெடிவிபத்து: சென்னையிலும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட், சுங்கத்துறை விளக்கம்

பெய்ரூட் வெடிவிபத்து: சென்னையிலும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட், சுங்கத்துறை விளக்கம்
பெய்ரூட் வெடிவிபத்தை தொடர்ந்து ஆபத்து சென்னையிலும் 740 அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக சுங்கத்துறை விளக்கம் அளித்து உள்ளது.
சென்னை

லெபனான் தலைநகர் பெய்ரூட் சேமித்து வைக்கப்பட்டு இருந்த   2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் குறைந்தது 135 பேர் இறந்துள்ளனர், மேலும் 5,000 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக உலக நாடுகள் தங்களது நாட்டில் உள்ள துறைமுகங்களில் சேமித்து வைத்திருக்கும் வெடிக்கக் கூடிய வேதிப்பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை துறை முகத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக 740 மெட்ரிக் டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சுமார் 35-க்கும் அதிகமான கண்டெய்னர்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செய்தியானது சென்னைவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 2015-ம் ஆண்டு கரூர் அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் உரிய ஆவணங்கள் இல்லாததால் இறக்குமதி செய்த சுமார் 740 டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள், வட சென்னையில் உள்ள துறைமுக கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை சுங்கதுறை அலுவலகம் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது, சென்னையில் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறை சொந்தமான வேதிகிடங்கில் பாதுகாப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மணலியில் உள்ள வேதிக்கிடங்கை சுற்றிலும் குடியிருப்புகள் இல்லை;  அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கடந்த ஆறு வருடமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்புடன் உள்ளதாகவும், மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இ- ஆக்சன் முறையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடும் நடவடிக்கையில் உள்ளதாகவும் சுங்கதுறை விளக்கம் தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பெய்ரூட் வெடிவிபத்து: மக்கள் போராட்டம் எதிரொலி: லெபனான் அரசு பதவி விலகுவதாக பிரதமர் ஹாசன் அறிவிப்பு
பெய்ரூட் வெடிவிபத்து சம்பவத்தில் மக்கள் நடத்திய போராட்டம் எதிரொலியாக, லெபனான் அரசு பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹாசன் அறிவித்துள்ளார்.
2. பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள்
பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
3. பெய்ரூட் வெடிவிபத்து: வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும்- டொனால்டு டிரம்ப் சந்தேகம்
பெய்ரூட் வெடிவிபத்து வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...