மாநில செய்திகள்

சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றிய இலங்கை தாதா + "||" + Claiming to be starring in a movie Having nose surgery SriLanka Don

சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றிய இலங்கை தாதா

சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றிய இலங்கை தாதா
சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி இலங்கை நிழல் உலக தாதா அங்ககொடா லொக்கா மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்து இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை

இலங்கை நிழல் உலக தாதா அங்ககொடா லொக்கா கொலை வழக்கில் தனிப்படைகள் மதுரை, ஈரோடு, கோவையில் விசாரணை நடத்தி வரும் நிலையில்,   சிபிசிஐடி-யிடம் இந்திய உளவு அமைப்பான "ரா" அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளது. 

கோவையில் உயிரிழந்தது லொக்கா என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட உள்ளது. லொக்காவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் சென்னை  தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடலிலிருந்து எடுக்கப்பட்ட இதயமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த வழக்கில் கைதான சிவகாமசுந்தரியின் 7 வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடி வரை பணம் பரிமாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, சிபிசிஐடி நடத்திய விசாரணையில் கோவை தனியார் மருத்துவமனையில் அவர் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பாலாஜி நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்து இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றி தனது தோற்றத்தை மாற்றியுள்ளதும் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி என்ன ஆனார்...? போலீசார் விசாரணை
தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
2. இலங்கை தாதா அங்கொடா லொக்கா மரணம்: பெண் வக்கீல்-பெற்றோர், கணவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
இலங்கை தாதா அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக மதுரையில் பெண் வக்கீல், அவரது பெற்றோர், முன்னாள் கணவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
3. தமிழகத்தில் உயிர் இழந்த இலங்கையின் பிரபல தாதாவை காதலியே கொலை செய்திருக்கலாம்...! அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் உயிர் இழந்த இலங்கை தாதாவின் உடல் எரிக்கப்பட்ட சம்பவத்தில், அவரை காதலியே பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.