மாநில செய்திகள்

பழனியில் பயங்கரம் தெரு முழுவதும் மனித மண்டை ஓடுகள் செய்வினை செய்யப்பட்டதாக மக்கள் அச்சம் + "||" + Tamil Nadu shocker: Human skull and bones left outside homes in Palani

பழனியில் பயங்கரம் தெரு முழுவதும் மனித மண்டை ஓடுகள் செய்வினை செய்யப்பட்டதாக மக்கள் அச்சம்

பழனியில் பயங்கரம் தெரு முழுவதும் மனித மண்டை ஓடுகள் செய்வினை செய்யப்பட்டதாக மக்கள் அச்சம்
பழனியில் பயங்கரம் தெருமுழுவதும் சிதறிக்கிடந்த மனித மண்டை ஓடுகள் தெருவிற்கே செய்வினை செய்யப்பட்டதாக மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
பழனி

காரில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மரணமடைந்த மூன்று பேரும் ஆறு வயது உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான பழனியில் உள்ள தேவங்கர் தெருவில் வசிக்கும் மக்களுக்கு, இன்று காலை எழுந்ததுமே ஒரு அதிர்ச்சி காணப்பட்டது. அந்த தெருவில் வசிப்பவர்கள் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் வீடுகள் முன்பு  மனித மண்டை ஓடுகள்  மற்ரும் எலும்புகள் சிதரி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

மண்டை ஓடுகள் மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு நிற பொடிகள் தூவபட்டு இருந்தது. கதவுகள் மற்றும் வாயில்களுக்கு சற்று முன்னால் அது வைக்கபட்டு உள்ளதாக தெரிகிறது.இது போன்றௌ குறைந்தபட்சம் நான்கு வீடுகள் மற்றும் ஒரு கடைக்கு முன்னால் காணப்பட்டது. இதனால் மக்கள் அதைக் கடந்து செல்ல பயந்தார்கள். மக்கள் மந்திரவாதிகள் யாராவது செய்வினை செய்து இருக்கலாம் என பயந்துபோய் உள்ளனர்.
குடித்துவிட்டு அந்த பகுதி இளைஞர்கள் செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் போலீசார் முறையான புகார் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறினார்கள். சந்தேக நபர்கள்  குறித்து சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் கூறினர்.


ஆசிரியரின் தேர்வுகள்...