இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 67.98 சதவீதமாக உயர்வு


இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 67.98 சதவீதமாக உயர்வு
x
தினத்தந்தி 7 Aug 2020 10:45 PM GMT (Updated: 7 Aug 2020 9:46 PM GMT)

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 67.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து 49 ஆயிரத்து 769 பேர் வீடு திரும்பினர்.

இதன்மூலம் இங்கு கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 78 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது.

குணம் அடைவோர் விகிதம் இங்கு 67.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 384 ஆகும். இது 29.96 சதவீதம் ஆகும்.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கருத்து கூறுகையில், “ மத்திய அரசால் வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை நெறிமுறைகள்படி ஆஸ்பத்திரி உள்கட்டமைப்பை மேம்படுத்தியதாலும், நோயாளிகளுக்கு தரமான, திறமையான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததாலும், குணம் அடைந்தோர் விகிதம் முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளது” என குறிப்பிட்டது.


Next Story