மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்வு + "||" + Water inflow to Mettur Dam 90,000 cubic feet rise

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்றைய அளவில் இருந்து இருமடங்காக உயர்ந்து 90,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
சேலம்,

காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை மற்றும் நுகு அணை ஆகிய அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.


இந்த மூன்று அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,23,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 45,000 கன அடியாக இருந்தது. இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இருமடங்காக அதிகரித்து வினாடிக்கு 90,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீா்மட்டம் நேற்றைய அளவில் இருந்து 5 அடி உயர்ந்து 75.83 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நொடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 37.92 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையின் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
2. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 49,000 கனஅடியாக குறைவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 61,000 கனஅடியிலிருந்து 49,000 கனஅடியாக குறைந்துள்ளது.
3. மேட்டூர் அணையின் நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
4. மேட்டூர் அணையின் நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
5. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,241கன அடியில் இருந்து 12,450 கன அடியாக அதிகரித்துள்ளது.