மாநில செய்திகள்

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது - அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + In TamilNadu 43 Physicians The information that they were killed by Corona is falseMinister Vijayabaskar

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 43 மருத்துவர்கள் இறந்ததாக ஒரு தகவல் அண்மையில் வெளியானது. அந்த தகவல் குறித்து மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் தகவலை இந்திய மருத்துவசங்கத்தின் தமிழக தலைவர்  மறுப்பு தெரிவித்துள்ளார். ஆதலால், சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், ' கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது மருத்துவமனை சிகிச்சைகளில் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

சிகிச்சை பெற்று வருபவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையில், கொரோனா தொற்றானது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா மரண எண்ணிக்கையில் எதுவும் மறைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்
தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் கொரோனா பாதித்த முதியோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனா பாதித்த முதியோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
4. தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்
தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...