மாநில செய்திகள்

தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் உள்ளது - உதயநிதி ஸ்டாலின் + "||" + The e-pass is there so that the DMK does not have to start election work Udayanidhi Stalin

தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்
தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

ஊரடங்கு காரணமாக அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமுத்து என்ற ஆட்டோ ஓட்டுனர் எப்.சியை புதுப்பிக்க ஐந்து மாதங்களாக அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முயற்சித்து வந்துள்ளார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க முடியாமல் போகவே ஒருகட்டத்தில் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி உள்ளார். தற்கொலைக்கும் முயன்றார். இந்த சம்பவம் செய்திகளில் வெளியாகின.


இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்துக்கு புது ஆட்டோ வாங்கிக் கொள்வதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார்.

அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் கரப்ஷன் ஆட்சி. நான் இ-பாஸ் எடுக்காமல் தூத்துக்குடி சென்றதாக சொல்கிறார்கள். நான் இ-பாஸ் எடுக்காமல் சென்றிருந்தால் ஏன் என் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதியை சாக்லேட் பாய் என்று விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் 'சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை. என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார்., ஒரு பிளேபாய் என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துகள் - உதயநிதி ஸ்டாலின்
நீட் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. நீட் தேர்வில் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
நீட் தேர்வில் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
3. நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் - உதயநிதி ஸ்டாலின் டுவீட்
நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.