விவசாயிகளுக்கு கலப்பின பசுக்களை வழங்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி


விவசாயிகளுக்கு கலப்பின பசுக்களை வழங்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 10 Aug 2020 10:04 AM GMT (Updated: 10 Aug 2020 10:04 AM GMT)

விவசாயிகளுக்கு கலப்பின பசுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கொரோனா நோய் தடுப்பு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

கொரோனாவால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கள்ளக்குறிச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கையால் வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு கலப்பின பசுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் எப்போது பாதிக்கப்பட்டாலும் அதிமுக அரசு நேசக்கரம் நீட்டி உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story