கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 12:53 PM GMT (Updated: 10 Aug 2020 12:53 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்ட வாரியாக சென்று முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை, தென்காசி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்ற அவர் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்படும். அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு ரூ.235 கோடி அளவுக்கு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.   ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story