மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது + "||" + number of Covid 19 death cases in Tamil Nadu has crossed 5,000

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா  பலி  எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா வைரசால் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 65 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,532 ஆண்கள், 2,382 பெண்கள் என மொத்தம் 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 32 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 278 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 744 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 976 பேரும், செங்கல்பட்டில் 483 பேரும், திருவள்ளூரில் 399 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 18 பேரும், நீலகிரியில் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 74 ஆயிரத்து 849 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 815 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 80 பேரும், தனியார் மருத்துவமனையில் 34 பேரும் என 114 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் திருவாரூரை சேர்ந்த 4 மாத பச்சிளம் குழந்தை உடல் நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனையில் அந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

நேற்று உயிரிழந்தவர்களில், சென்னையில் 25 பேரும், கோவை, கன்னியாகுமரியில் தலா 7 பேரும், விருதுநகர், வேலூர், தூத்துக்குடி, தென்காசி, மதுரை, செங்கல்பட்டில் தலா 5 பேரும், திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூரில் தலா 4 பேரும், நெல்லை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், காஞ்சீபுரத்தில் தலா 3 பேரும், திருச்சியில் இருவரும், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், திருவாரூரில் தலா ஒருவரும் என 26 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 5,041 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 37 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,305 பேரும், கோவையில் 388 பேரும், விருதுநகரில் 355 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 675 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 53 ஆயிரத்து 99 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 863 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 701 பேரும், ரெயில் மூலம் வந்த 426 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 790 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 61 அரசு நிறுவனங்கள், 69 தனியார் நிறுவனங்கள் என 130 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆயுதப்படை போலீஸ்காரர்கள் உள்பட 106 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்தது
வேலூர் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் உள்பட 106 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்துள்ளது.
2. சேலம் மாவட்டத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 டாக்டர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 டாக்டர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
4. உயிரிழப்பை கட்டுப்படுத்த குமரியில் 12,500 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை 2 கட்டமாக நடந்தது
குமரி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்துவதற்காக 2 கட்டமாக 12,500 முதியவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.12 - கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...