மாநில செய்திகள்

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.408 குறைந்தது + "||" + The price of gold fell by Rs 408 per pound

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.408 குறைந்தது

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.408 குறைந்தது
ஒரு சவரன் தங்கத்தின் விலை 408 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னை,

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு

காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.


இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 408 ரூபாய் குறைந்து, ரூ.42,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,314 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,500 ரூபாய் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது
தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.288 குறைந்து 5,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...