மாநில செய்திகள்

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை + "||" + Gold sells for Rs 40,840 in Chennai

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.


இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 2,400 ரூபாய் வரை குறைந்தது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.5,105க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
2. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் மழைநீரை சேமிக்க ஏற்பாடு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவு
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் வடகிழக்கு பருவ மழை தண்ணீரை நிரப்பி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
3. சென்னையில் இடியுடன் கூடிய கனமழை
சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
4. சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் - 30 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது இதில் 30 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
5. சென்னை, செங்கல்பட்டில் மழை
சென்னை மற்றும் செங்கல்பட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.