மாநில செய்திகள்

திமுகவில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் நீக்கம் + "||" + KU.KA.SELVAM MLA of Thousand Lightss acked from Party Membership by DMk

திமுகவில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் நீக்கம்

திமுகவில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் நீக்கம்
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ, கு.க செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை,

ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை அண்மையில் சந்தித்தது தமிழக அரசியலில் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. பாஜக தலைவரை சந்தித்ததும் உடனடியாக கட்சியில் இருந்து கு.க செல்வத்தை இடை நீக்கம் செய்த திமுக தலைமை, உங்களை ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டது. 

இதற்கு கு.க செல்வம் தரப்பில் விளக்கமும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், கு.க செல்வம் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை எனக்கூறியுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு: திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. வரும் 9-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3. தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில்
தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: கு.க செல்வம்
திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: என்று ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் தெரிவித்துள்ளார்.
5. என்னை குறித்த தில்லு முல்லு பிரசாரம் எடுபடாது - திமுக பொருளாளர் துரைமுருகன்
என்னை குறித்து பரப்பப்படும் தில்லு முல்லு பிரசாரம் எடுபடாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.