மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி + "||" + Inspector Sridhar Bail pettion dismissed by Madurai court

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர்.  இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக  ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கனேஷ் பாலகிருஷ்ணன் உள்பட காவல்துறையை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனார். கைதான 10 பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி  கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். 

இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் காவலர் வெயில் முத்து ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பளித்த மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசாரணை
சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று திடீரென வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு வந்தனர்.
2. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிசிஐடி அறிக்கை தாக்கல்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.