தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளீயிடு


தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளீயிடு
x
தினத்தந்தி 13 Aug 2020 1:21 PM GMT (Updated: 13 Aug 2020 1:21 PM GMT)

தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளீயிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,20,355 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,146 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,61,459 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 53,499 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

அரியலூர் 76 பேர்,

செங்கல்பட்டு 453 பேர்,

சென்னை 989 பேர்,

கோயம்புத்தூர் 289 பேர்,

கடலூர் 258 பேர்,

தருமபுரி 21 பேர்,

திண்டுக்கல் 141 பேர்,

ஈரோடு 50 பேர்,

கள்ளக்குறிச்சி 86 பேர்,

காஞ்சிபுரம் 243 பேர்,

கன்னியாகுமரி 185 பேர்,

கரூர் 40 பேர்,

கிருஷ்ணகிரி 8 பேர்,

மதுரை 151 பேர்,

நாகப்பட்டினம் 68 பேர்,

நாமக்கல் 47 பேர்,

நீலகிரி 7 பேர்,

பெரம்பலூர் 31 பேர்,

புதுக்கோட்டை 131 பேர்,

ராமநாதபுரம் 60 பேர்,

ராணிப்பேட்டை 57 பேர்,

சேலம் 173 பேர்,

சிவகங்கை 65 பேர்,

தென்காசி 138 பேர்,

தஞ்சாவூர் 154 பேர்,

தேனி 286 பேர்,

திருப்பத்தூர் 64 பேர்,

திருவள்ளூர் 390 பேர்,

திருவண்ணாமலை 150 பேர்,

திருவாரூர் 27 பேர்,

தூத்துக்குடி 94 பேர்,

திருநெல்வேலி 189 பேர்,

திருப்பூர் 64 பேர்,

திருச்சி 161 பேர்,

வேலூர் 141 பேர்,

விழுப்புரம் 104 பேர்,

விருதுநகர் 219 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story