சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு


சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 2:14 PM GMT (Updated: 13 Aug 2020 2:14 PM GMT)

சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவில் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அப்போது சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கங்கள் அணிவிப்பது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பரவலை தடுக்க முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவ துறையை சேர்ந்த 9 பேருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. 

அவர்களின் பட்டியல் விவரம் வருமாறு:-

டாக்டர்கள் ராஜேந்திரன், உமா மகேஸ்வரி, சதீஷ்குமாருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. செவிலியர்கள் ராமுத்தாய், கிரேஸ் எமைமா, சுகாதார துணை இயக்குனர் எஸ்.ராஜூ, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், ஆய்வக பணியாளர் ஜீவராஜ் ஆகியோருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story