இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும் - சௌமியா சுவாமிநாதன்


இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும் - சௌமியா சுவாமிநாதன்
x
தினத்தந்தி 15 Aug 2020 5:39 AM GMT (Updated: 15 Aug 2020 5:39 AM GMT)

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

சென்னை,

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. இன்னும் சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவிலும் மூன்று வித கொரோனா தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக கிடைக்கும் என்று   உலக  சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தந்தி டிவிக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.


Next Story