மாநில செய்திகள்

மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை + "||" + Madurai should be declared the second capital - Ministers Udayakumar and Cellur Raju request

மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை

மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை
மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை,

மதுரையில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களின் நலனுக்காக புதிய மாவட்டங்கள், புதிய கோட்டங்கள் உருவாக்குவது போல இரண்டாம் தலைநகரமாக மதுரை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைச்சர்கள் உதயகுமாரும், செல்லூர் ராஜுவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், “வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெறுவதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்கான கோரிக்கை முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை-தேனி இடையே அகல ரெயில் பாதை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தது விரைவில் சோதனை ஓட்டம்
மதுரை-தேனி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
2. மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்
மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3. மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
5. மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க சாத்தியம் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
தமிழகத்தில் மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க சாத்தியம் இல்லை. எனினும் இதுபற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.