தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதாரத்துறை தகவல்


தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 17 Aug 2020 12:36 PM GMT (Updated: 2020-08-17T18:06:57+05:30)

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று புதிய உச்சமாக 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,835 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 120 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,667 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,83,937 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 54,122 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

Next Story