சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 18 Aug 2020 1:30 AM GMT (Updated: 18 Aug 2020 1:30 AM GMT)

சென்னையில் 3-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.83.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் 3 வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.83.99க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 23-வது நாளாக விலை மாற்றமின்றி ரூ.78.86க்கு  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை நிர்ணயம் வாகன ஓட்டிகளிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story