மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் - பாஜக மாநில தலைவர் முருகன் + "||" + The BJP will follow the Hindu Front's position on the Ganesha Chaturthi issue LMurugan

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் - பாஜக மாநில தலைவர் முருகன்

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் - பாஜக மாநில தலைவர் முருகன்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-


விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை மாநில அரசு பின்பற்றுகிறதா? விநாயகர் சதுர்த்தியில் மட்டும் ஏன் பின்பற்ற முயற்சிக்கிறது?

டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவே அனுமதி கோருகிறோம்; ஊர்வலத்திற்கு அல்ல. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினர்.


தொடர்புடைய செய்திகள்

1. விநாயகர் சதுர்த்தி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 4 அடிக்கு மேல் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கூடாது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 4 அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மண்டல்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.