மாநில செய்திகள்

மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது தொடங்கும்? ஐகோர்ட்டு கேள்வி + "||" + When do high school classes start? HC asks

மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது தொடங்கும்? ஐகோர்ட்டு கேள்வி

மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது தொடங்கும்? ஐகோர்ட்டு கேள்வி
மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,

கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத ‘ஹால் டிக்கெட்’ பெற்றிருந்த தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் வருகிற செப்டம்பர் 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற இருப்பதாகவும், பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ளதால், தனி தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிடவேண்டும். அதுவரை, மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்கவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், “மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்போது தொடங்கப்பட உள்ளது? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பத்ம விபூஷண் விருது பெறும் அளவுக்கு சமூகத்திற்கு பாதல் செய்த தியாகம் என்ன? பஞ்சாப் முதல் மந்திரி கேள்வி
பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதலுக்கு கடந்த 2015ம் ஆண்டு மார்ச்சில் நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த சூழலில் விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2. ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம்: காவிரி டெல்டா அமைச்சர்கள் யாரும் வாயை திறக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் யாரும் வாயே திறக்காதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
3. பசுமை பட்டாசு என்றால் என்ன? கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
பசுமை பட்டாசு என்றால் என்ன? என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
4. பீகாரில் மோடியின் அலை வீசி இருந்தால் அதிக இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வென்றது எப்படி? நாராயணசாமி கேள்வி
பீகாரில் மோடியின் அலை வீசி இருந்தால், அதிக இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வென்றது எப்படி? என முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
5. செயற்கைக்கோளை பூமியில் இருந்து கட்டுப்படுத்தும் பொழுது இ.வி.எம். இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது? காங்கிரஸ் கேள்வி
செவ்வாய் கோளுக்கு செல்லும் விண்கல திசையை பூமியில் இருந்து கட்டுப்படுத்த முடியும்பொழுது மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.