மாநில செய்திகள்

தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு - முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு + "||" + Sve sekar applied a bail pettion in Chennai high court

தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு - முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு

தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு - முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு
தேசியக் கொடியை அவமதித்ததாக சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 40). தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அனுப்பிவைத்தார். 

அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூ-டியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேசிய கொடியை அவமதித்ததாக அவர் மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் ஆகஸ்ட் 24-ம் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு- சென்னை உயர் நீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. மாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
மாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
3. அக்.31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - சென்னை மாநகராட்சி
அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
4. அரசு ஊழியர்கள் மட்டத்தில் உள்ள கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பொதுநலனுடன் ஒரு திட்டத்தை உருவாக்கும்போது, அரசு ஊழியர்கள் மட்டத்தில் சில கருப்பு ஆடுகள், சுயநலனுக்காக முட்டுக்கட்டையாக இருந்து அதை தடுப்பார்கள். இதுபோன்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்
ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.